பக்கம் எண் :

34வளவன் பரிசு

  வனாம். இவன் தந்தையைப் போலப் ‘போர் போர் என்று
  அலையமாட்டான் என்று மக்கள் நம்புகிறார்கள்.

சு.பாண்டியர் : (சிரித்து) இராசராசன் போருக்குப் புறப்பட மாட்டான்.
  அவன் நாட்டை நோக்கிப் பகைவன் படையெடுத்து வந்தால் என்ன
  செய்வான்? பகைவனிடம் அறவுபதேசம் செய்வானா? உம்.....சோழரின்
  படை நிலைமை எப்படியிருக்கிறது?

காங்கேயன் : நமது படை பலத்தில் பத்தில் ஒரு பகுதியே அவனது படை.
  சோழன் படையைப்பெருக்கவில்லை. போர்க்கருவிகளையும்
  புதுப்பிக்கவில்லை. வீரர்களுக்குத் தேவையான தினசரிப் பயிற்சிகூடச்
  சரிவர நடைபெறுவதில்லை.

மழவர் மாணிக்கம் : படையைப் பெருக்கக் கருவூலம் நிறைந்திருக்க
  வேண்டும்; குறுநில மன்னர்களிடமிருந்து திறைப் பணம் முறையாக
  வருவதில்லை. தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லை. அதனால் வளவன்
  இன்று வறியவனாக இருக்கிறான். முடிசூட்டு விழாவைக்கூட ஆடம்பரமாக
  நடத்தவில்லை. ஒரு குறுநில மன்னன் அரியணையில் அமரும் விழாக்
  கூட இன்னும் சிறப்புற நடைபெறும். சோழன் இராசராசன் செலவைச்
  சுருக்க அமைச்சருக்கு ஆணை பிறப்பித்தானாம்.

குருகுலத்தரையன் : அரசே, சோழ நாட்டு நிலைமை நமக்குச் சாதகமாகவே
  இருக்கிறது.

காங்கேயன் : இன்னும் நாங்கள் முக்கியமான செய்தியைச் சொல்லவில்லை.
  அமைச்சரே!

 

குருகுலத்தரையன் : முக்கியமான செய்தியா?

காங்கேயன் : ஆமாம்! சோழநாட்டுக் குறுநில மன்னர்களில் பெரும் பலம்
  பெற்றவன் கோப்பெருஞ்