சிங்கன். பல்லவர் குலத்து வந்து கோப்
பெருஞ்சிங்கனுக்குத் தன்
மூதாதையர் போல் முடிமன்னனாக ஆள வேண்டும் என்ற ஆசை
பிறந்திருக்கிறதாம். அதனால் அவன் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டான்.
சோழனின் முடிசூட்டு விழாவிற்குத் தானும் வரவில்லை. தன் சார்பில்
பிரதிநிதி என்று யாரையும் அனுப்பவில்லை. பல்லவன் சிங்கனின்
துணையில்லை என்றால், சோழப் புலியின் பற்கள் பறிபோயின என்று
பொருள்.
மழவர் மாணிக்கம் : அதைக் காட்டிலும் விந்தை,
சோழனுக்குப் பெண்
கொடுத்த வாணகோவரையன் செயல். அவருக்கு இந்த முதுமைப் பருவத்தில்
சுதந்திர மன்னனாக ஆட்சி செய்யும் ஆசை பிறந்துவிட்டது. அதனால்
கோப்பெருஞ்சிங்கனோடு நட்புக்கொண்டு சோழனைப் பகைத்துக்
கொள்கிறாராம். மருகன் முடிபுனை விழாவில் மாமனார் கலந்து
கொள்ளவில்லை.
சு.பாண்டியர்: உரனில் சிறந்த சிற்றரசன்
கோப்பெருஞ்சிங்கன். உறவில் சிறந்த
சிற்றரசன் வாணகோவரையன். இருவர் துணையும் சோழனுக்கு இல்லை
என்பது நல்ல செய்தி. சோழனின் துணைவர்கள் பகை கொண்ட நேரத்தைப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்’ என்பது வள்ளுவர் வாய்மொழி. இதுவரை
நம்முடன் ஒட்டாத வாணகோவரையரையும், கோப் பெருஞ்சிங்கனையும்
நம்முடன் ஒட்டும்படி செய்யவேண்டும், குருகுலத்தரையரே.
குருகுலத்தரையன் : அரசே!
சு. பாண்டியர் : கோப்பெருஞ்சிங்கன்
போர்த்திறம் மிக்கவன். குலோத்துங்கன்
இந்த மதுரையை வென்ற |