போரிலே அவனுக்குத் துணையாக நின்ற படைத் தலைவன்.
அரசியலறிவில்அவனொருசாணக்கியன்.
அவன் நட்பு நமக்குக் கிடைப்பது
நல்லது.அமைச்சரே, கோப்பெருஞ்சிங்கனுக்குத் தக்க பரிசுகளனுப்பி
நம்
நட்பைத் தெரிவியுங்கள்.
குருகுலத்தரையன் :
செய்கிறேன் அரசே!
சு. பாண்டியர் :
வாணகோவரையர் படைத்திறன் பெற்றவர் அல்லர்.
என்றாலும் சோழனுக்கு மாமன்
என்ற முறையில் அவரது பகை
இராசராசனுக்கு இழிவைத் தரும். அதனால் அவருக்கும் பரிசனுப்பி
நமது
நட்பைத் தெரிவியுங்கள்.
குருகுலத்தரையன் :
அப்படியே அரசே!
சு. பாண்டியர் :
காங்கேயரே, நமது படையைப் போர்க்கு ஆயத்தம்
செய்துவையுங்கள். ஆனால்
நாம் எப்போது படையெடுப்போம் என்பது
படை வீரர்க்கும் தெரியாத இரகசியமாக இருக்கட்டும்.
காங்கேயன் :
இந்த நொடி ஆணையிட்டால், மறு நொடி கிளம்பும்
வகையில் நமது படை ஆயத்தமாக
இருக்கிறது. நாம் எந்த நாட்டை
நோக்கிச் செல்வோம் என்பது ஒருவருக்கும் தெரியாது.
சு. பாண்டியர் :
முடிசூடிய இராசராசன் கொஞ்சம் ஓய்வு பெறட்டும்.
அமைச்சரே, சோழனின் ஒற்றர்
நம் அரண்மனை வாயிலை
முற்றுகையிட்டிருப்பாரே!
குருகுலத்தரையன் :
ஆம் அரசே! சோழ ஒற்றரின் நடமாட்டம் நம்
தலைநகரில் அதிகமாகியுள்ளது
என்று நம் ஒற்றர்கள் தெரிவித்தார்கள்.
சு. பாண்டியர் :
அமைச்சரே, எப்போது நமது படை சோழப்புலியின் மீது
பாயப் போகிறது என்பது
இராச |