ராசன் அறியக் கூடாது ! சற்றும் எதிர்பாராத நிலையில் அவனைத்
தாக்கவேண்டும். எதிர்த்து
நிற்கும் ஆற்றலற்று (ஏளனமாக) சோழச்
சக்கரவர்த்திகள் என் திருவடியைத் தொழவேண்டும்.
குருகுலத்தரையர் :
சோழ ஒற்றரைப் பற்றிய கவலையை விடுங்கள்.
அவர்களைக் கண்காணிக்க
ஆவன செய்கிறேன்.
சு. பாண்டியர் ;
என் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது.
ஹஹ் ஹஹ் ஹா!
(பாண்டியன் உரக்கச் சிரிக்கிறான்)
-திரை-
காட்சி - 5
இடம் :
அன்னம் இல்லம்
நேரம் :
பிற்பகல்
தோன்றுவோர் :
அன்னம், தனபதி, அம்பலம்
[இல்லத்தின் கூடத்தில் உள்ள ஊசலில் அன்னம் அமர்ந்து மெல்ல
உந்தியவாறு பாடுகிறாள்.]
அன்னம் :
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்றிருக்கை
[தனபதி உள்ளே வருகிறார்.] |