தனபதி :
உனக்கு இது எதற்கு?
அன்னம் :
அப்பா, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய இனிய பாட்டு
இது. இதைப் படித்தால்
கிடைக்கும் இன்பம், பால் பழம் உண்டாலும்,
பட்டுடை பூண்டாலும், பசும் பொன் அணிந்தாலும்
கிடைக்காது! தமிழ்ச்
சுவையே தனிச்சுவை.
தனபதி :
உருத்திரங்கண்ணனார்...அன்னம், இப்போதுதான் நினைக்கு
வருகிறது. வைரவணிகர்
சாத்தப்பர் சொன்னார். உன்னை நம்மூர்ச்
சோலையில் யாரோ ஒரு புலவர் குடும்பத்து
இளைஞனோடு அடிக்கடி
பார்க்கிறாராம். அந்த இளைஞன் பெயர்கூட ஏதோ கண்ணன் என்றாரே.....
அம்பலம் :
தாமரைக்கண்ணன் என்று சொன்னாருங்களா?
[அன்னம் அம்பலத்தை முறைக்கிறாள்]
தனபதி :
ஆமாம். அதே பெயர்தான், உனக்கெப்படித் தெரியும்?
அம்பலம் :
(விழித்து) எனக்கெப்படித் தெரியும்? ஏதோ கண்ணன் என்றதும்
தாமரைக்கண்ணனாயிருக்குமோ?
என்று நினைத்தேனுங்க.
தனபதி :
புலவர்கள் பொல்லாதவர்கள். பொருள் இருக்கிறவர்களைச் சுற்றி,
‘பரிசு பரிசு’
என்று அரித்துவிடுவார்கள். உறையூரின் பெருஞ்செல்வரில்
நான் ஒருவன் என்பதை அறிந்துதான்
அந்தக் கண்ணன் உனக்குக் கண்ணி
வைக்கிறான். அன்னம், எச்சரிக்கையோடிரு.
அன்னம் :
(சினத்தோடு) அப்பா, தாமரைக்கண்ணன் பணத்தின் பின்னே
செல்லும் பஞ்சப்புலவன்
அல்ல. |