பக்கம் எண் :

காட்சி - 543

தனபதி : பத்து நாள் பொறுத்துக்கொள்! தாமரைக்கண்ணன் என்னை
  இந்திரன் - சந்திரன் என்று பாராட்டிப் பாடிய பாட்டை உன்னிடம்
  காட்டுகிறேன். அம்பலம்!

அம்பலம் : ஐயா!

தனபதி : தாமரைக்கண்ணன் எங்கே இருக்கிறான் என்று தெரியுமா?

அம்பலம் : தெரியும் ஐயா!

தனபதி : அவனை நான் பார்க்க விரும்புவதாகச் சொல் கடைக்கு வந்து
  காணும்படி கூறு.

அம்பலம் : சொன்னபடி செய்கிறேனுங்க.

     [அம்பலம் வெளியேற, அன்னம் கோபத்தோடு உள்ளறை நோக்கிச்
     செல்கிறாள்.]


                         
-திரை-

                        
காட்சி - 6

இடம் : சோழன் அரண்மனை

நேரம் : இரவு

தோன்றுவோர் : புவனமுழுதுடையாள், இராசராசர், இராசேந்திரன்.

     [புவனமுழுதுடையாள் தனதறையில் காத்துக் கொண்டிருக்கிறாள்.
     அறையின் நான்கு மூலைகளிலும் பாவை விளக்குகள் எரிந்து