ஒளிபரப்புகின்றன. அரசியின் விழிகள் அடிக்கடி அறை வாயிலை நோக்கித்
திரும்புகின்றன.
யாரோ நடந்துவரும் ஓசை கேட்டு அரசி எழுகிறாள்.
அதற்குள் இராசராசரும் இராசேந்திரனும்
உள்ளே வருகிறார்கள்.]
இராசராசர் : பார்த்தாயா, இராசேந்திரா!
நான் உன்னிடம் சொன்னதுபோல
உன் அன்னை உண்ணாமல் உறங்காமல் நமக்காகக்
காத்திருக்கிறாள்.
புவனமுழுதுடையாள் : காத்திருப்பது தெரிந்தும்
என்னைக் காக்கவைப்பதில்
திருப்தி அடைகிறார் அரசர், அப்படித் தானே?
இராசராசர் : இல்லை தேவி. காத்திருப்பதை
அறிந்து உரிய நேரத்தில்
ஓடிவரத்தான் விரும்பினேன். அரசாங்கப்பணி என்னை
அடிமைப்படுத்திவிட்டது.
மன்னராகப் பிறப்பது துன்பமேயன்றித்
தொழுந்தகைமை பெற்றதன்று.
புவன : உங்களுக்குத்தான் நேரம் கழித்து உண்பதும்,
உறங்குவதும்
பல்லாண்டுப் பழக்கம். சிறுவன் இராசேந்திரனையும் இப்படித்
தொல்லைப்படுத்த
வேண்டுமா? இராசேந்திரா! உன் தந்தைக்குத்தான்
அரசாங்கப் பணியே உடல், பொருள்,
ஆவி! உனக்கென்ன? நீ நேரம்
தாழ்த்தாமல் உரிய நேரத்தில் உண்ணக்கூடாதா?
இராசேந்திரன் : அம்மா, நான் தந்தையுடனிருந்து
பயிற்சி பெற
வேண்டாமா? நான் இந் நாட்டு இளவரசன். அரசரின் பணியில் எனக்கும் சரி
பங்குண்டு.
புவன : தந்தையார் என்ன பயிற்சி
தருகிறார்? நள்ளிரவில் உண்டு,
அதன் பின் உறக்கம் வராமல் ஓரிரு
|