நாழிகை படுக்கையில் புரண்டு கதிரவன் உதயத்திற்கு முன்னரே எழுந்து
‘கடமை அழைக்கிறது’ என்று
அரசவைக்கு ஓடுவதற்குப் பயிற்சி
தருகிறாரா?
இராசேந்திரன் :
நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பை
ஏற்றுக்கொண்ட வேந்தன் ஆற
அமர உண்பதையும், ஆழ்ந்த உறக்கம்
கொள்வதையும் சில சமயங்களில் இழக்க நேருவது இயல்புதான்
தாயே!
புவன :
இராசேந்திரா! நீ பயிற்சி பெற்றுவிட்டாய்! உன் தந்தையைப்
போலத்தான் செய்வதெல்லாம்
சரியென வாதாடும் பயிற்சியைத் தந்தையார்
சரிவரக் கற்றுத் தந்துவிட்டார். உம்....தந்தையும்
தனயனும் ஒரே
மாதிரிதான்!
இராசராசர் :
(சிரித்து) புவனமுழுதுடையாளே, உன் பெயரை மீண்டும்
நினைவுபடுத்திக்கொள்.
உன்பெயர் அந்தப்புரம் முழுதுடையாள் அன்று!
புவனமுழுதுடையாள்! உன் நலனைக் காட்டிலும் ஊர்
நலனைப் பெரியதாய்
மதித்துப் பேணவேண்டும். நாட்டுநலனுக்காக உன் நாயகன் சில நாழிகை
கழித்து உண்பதால் குறைந்து போகமாட்டான். சில நாள்கள் சாதாரண
மனிதனாக ஊர் ஊராக
அலைந்து திரிந்தால் கரைந்து விடமாட்டான்.
புவன :
(திகைத்து) மன்னவ, பேச்சோடு பேச்சாக வேறேதோ
சொல்கிறீர்களே! இரவு உணவுக்கு
நேரம் கழித்து வந்திருக்கிறீர்கள்! சில
நாள் ஊர் ஊராக அலைந்து திரிவதைப் பற்றி
ஏதோ கூறுகிறீர்களே அது
என்ன?
இராசேந்திரன் :
அம்மா, மன்னர்கள் மாறுவேடம் பூண்டு நள்ளிரவில்
நகர்வலம் வருவார்களல்லவா. |