பக்கம் எண் :

காட்சி - 647

இராசராசர் : இல்லை தேவி! எனக்குத் துணையாக என் மகன்
   இராசேந்திரன் வருகிறான்.

புவன : இராசேந்திரனா !

இராசேந்திரன் : ஆமாம் தாயே! நான்தான் உடன் செல்லப் போகிறேன்.
  அமைச்சரைக் காட்டிலும் நான் இளையவன்; வலியவன், தந்தையாரின்
  நிழலாகத் தொடர்ந்து அவர்க்கு எந்தத் துன்பமும் வராமல் காப்பேன்.

புவன : இளமையும் வலிமையும் போதா மகனே! தெளிவும்
  திறமும்வேண்டும்! அறிவும் அனுபவமும் வேண்டும்!

இராசராசர் : இராசேந்திரன் நம் புதல்வன்! என் ஆற்றலையும் உன்
  அறிவையும் ஒருசேரப் பெற்றள்ளான். அனுபவம் போதாதுதான்! அதை
  அவன்பெற வேண்டும் என்பதற்காகவே என்னுடன் அழைத்துச்
  செல்லுகிறேன்.

புவன : எப்போது புறப்படுகிறீர்கள்!

இராசராசர் : நாளை காலை விடிவதற்கு முன், எங்கள் பயணம்
  தொடங்கும். பத்து நாளில் திரும்பி விடுவோம். தேவி, அரசியலை விட்டு
  அறுசுவை பற்றிப் பேசுவோமா?


புவன : வாருங்கள், உண்ணச் செல்வோம்.

    [புவனமுழுதுடையாள் முன்னே செல்ல இராசராசரும் இராசேந்திரனும்
    பின் தொடருகின்றனர்.]

                         -திரை-