பக்கம் எண் :

48வளவன் பரிசு

                          காட்சி - 7

இடம் : உறையூர் வீதியில் தனபதியின் கடை.

நேரம் ; காலை.

தோன்றுவோர் : தனபதி, தாமரைக்கண்ணன், அம்பலம்.

   [கடையில் தனபதி அமர்ந்திருக்கிறார். அம்பலம் கடையின் மற்றொரு
   பகுதியில் கீழே உட்கார்ந்திருக்கிறான். தாமரைக்கண்ணன் கடைக்குள்
   வருகிறான்.]

தாமரைக்கண்ணன் : வணக்கம் வணிகரே!

தனபதி : (நிமிர்ந்து பார்த்து) வணக்கம். தம்பிக்கு என்னவேண்டும்?
  மரகதமா, மாணிக்கமா.....

தா. கண்ணன் : எனக்கு வேண்டியதொன்று உம்மிடம் உண்டு. அதைக்
  கேட்பதற்குப் பிறிதொரு முறை வருவேன். நீங்கள் என்னை அழைத்ததாக
  அறிந்து இப்போது வந்துள்ளேன்.


அம்பலம் : ஐயா, இவர்தானுங்க சின்னம்மா சொன்ன தாமரைக்கண்ணன்.

தனபதி : ஓ! புலவரா! உட்கார் தம்பி.

     [தாமரைக்கண்ணன் தனபதியின் அருகே அமர்கிறான்.]

தனபதி : தம்பி, பெரிய புலவர் என்று கேள்விப்பட்டேன்.

தா. கண்ணன் : நான் ஆண்டிலே இளம்புலவன்! ஆற்றலிலே பெரும்
   புலவன்! சிந்தைக்கு விருந்தாகும் செந்