தமிழ்க் கவிகள் பல இயற்றிப் புகழ் கொண்டவன். இந்நகரத்தில் உள்ள
கற்றோர் என்னை
அறிவார்கள்.
தனபதி :
என்ன தம்பி உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்?
தா. கண்ணன் :
தன்னுடைய ஆற்றல் உணராரிடையில் தான் தற்புகழ்தல்
தகும் புலவோற்கே என்று
சான்றோர் கூறுவர்.
அம்பலம் :
உங்க புகழை எங்க ஐயாவுக்கு சின்னம்மா அன்னம் நல்லபடி
எடுத்துச்
சொன்னாங்க.
தனபதி :
அம்பலம், குறுக்கே பேசாதே.
அம்பலம் :
சரிங்க.
தனபதி :
தம்பி, எனக்குப் புலவர்களைப் பற்றித் தெரியும். எத்தனையோ
புலவர்கள் என்
கடைக்கு வந்திருக்கிறார்கள். என்னைப் புகழ்ந்து பல
பாடல்கள் பாடியிருக்கிறார்கள். நானும்
அவர்களுக்குப் பொருளுதவி
செய்திருக்கிறேன். இல்லையா அம்பலம்?
[அம்பலம் பேசாமல் இருக்கிறான்.]
தனபதி :
என்னடா அம்பலம், மௌனமாக இருக்கிறாய். நான் கேட்டதற்குப்
பதில் சொல்ல வேண்டாமா?
அம்பலம் :
(சிறிது வருத்தத்துடன்) குறுக்கப் பேசாதே என்று என்னை
அடக்கிட்டீங்களே.
தனபதி :
ஓ! அதனால் பேசவில்லையா! சரி விடு! (தாமரைக் கண்ணனிடம்)
தம்பி, புலவர்களுக்கு
உதவி செய்வதில் எனக்கு எப்போதுமே
ஆசையுண்டு. |