தனபதி :
என்ன சொன்னார்?
தா. கண்ணன் :
பத்துப் பொன் தரலாம். ஏழு எட்டுப் பொன்னுக்கும் சில
கடைகளில் கிடைக்கும்
என்றார். நீங்களோ இருபது பொன் பெற்று
என்னை ஏமாற்றி விட்டீர்கள்.
தனபதி :
நான்தான் சொன்னேனே, என் வாணிபத்தைக் கண்டு வயிறெரியும்
சிலர் இப்படி இல்லாததும்
பொல்லாததும் கூறி வருகிறார்கள். தம்பிக்கு
இருபது பொன் கொடுத்து முத்துமாலை வாங்கிய
கோபமா? தம்பி.
என்னைப்பற்றி ஒரு பாடல் பாடு! மிகச்சிறந்த பதினாறு வடம் கொண்ட
முத்துமாலை
தருகிறேன். அதன் விலை முந்நூறு பொன்! என்ன தம்பி,
பாடுகிறாயா?
தா. கண்ணன்;
பதினாறுவட முத்துமாலைகள் பதினாறு கொடுத்தாலும்
பாடமாட்டேன்.
[தாமரைக்கண்ணன் கடையிலிருந்து வெளியேறுகிறான்]
தனபதி :
அம்பலம்.
அம்பலம் :
ஐயா!
தனபதி :
இவன் கிறுக்குப் புலவனாய் இருக்கிறானே! நூறு பொன் தந்தாலும்
பாடமாட்டானாம்!
முந்நூறு பொன் மதிப்புள்ள முத்து மாலைக்கும் பாட
மாட்டானாம்!
அம்பலம் :
அதோடு விடவில்லையே! முந்நூறு பொன் முத்துமாலை
பதினாறு தந்தாலும் பாடமாட்டேன்
என்று சொல்லிவிட்டாரே!
பதினாறு முந்நூறு எவ்வளவுங்க? |