பக்கம் எண் :

காட்சி - 753

தனபதி : அதெல்லாம் உனக்கெதுக்குடா! அம்பலம், தொகையைக் காதாலே
  கேட்டால் மதிப்புத் தெரியாது! கண்ணலே பார்த்தாத்தான் தெரியும்!
  முந்நூறு பொற்காசுகளை ஒரு பையில் போட்டுத் தருகிறேன். அதைக்
  கொண்டுபோய் அவனிடம் கொடுத்து என்னைப் பற்றி ஒரு பாட்டு
  எழுதித் தரும்படி கேள். உடனே எழுத முடியாவிட்டாலும், இரண்டு
  மூன்று நாளிலே எழுதித் தரச் சொல்.

அம்பலம் : பதினாறு முந்நூறே வேண்டாம் என்று சொன்னாரே! நீங்க
  வெறும் முந்நூறு கொடுத்தால் பாடுவாரா?

தனபதி : சொன்னபடி செய்! மறு பேச்சுப் பேசாதே.
 
அம்பலம் : உத்தரவுங்க.

                       
-திரை-

                      
காட்சி - 8

இடம் : உறையூர் அரண்மனையின் வெளி வாயில்.

நேரம் : விடியற்காலை.

தோன்றுவோர் : தாமரைக்கண்ணன், உழவர் வேடத்தில் இராசராசர்,
  இராசேந்திரன்.

    (உறையூர் அரண்மனையின் வெளி வாயிலருகே நிற்கின்றனர், அரசர்
  
   இராசராசரும், இளவரசன் இராசேந்திரனும். இவரும் மாறு வேடம்