பூண்டு உழவர்களாகத் தோன்றுகின்றனர்.)
இராசேந்திரன் :
தந்தையே, உறையூர் இந்த விடியற்காலத்திலேயே
விழித்துக் கொண்டதே!
உறையூர் அரண்மனையும் சோழநாட்டின்
தலைநகரத்து அரண்மனை போலச் சிறப்பாக அமைந்துள்ளது
என்பதை
இந்த வாயிலில் நின்று பார்த்தாலே தெரிகிறது வெளிநாட்டார் யாராவது
இந்த அரண்மனையைப்
பார்த்தால், உறையூரே சோழ நாட்டின்
தலைநகரம் என்று கூடச் சொல்லிவிடுவார்கள்.
இராசராசர் ;
ஆமாம் மகனே! இந்த அரண்மனை அப்படித்தான் காட்சி
தருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னால் கோப்பெருஞ் சோழன்,
கரிகால் வளவன் முதலான மாபெரும் மன்னர்கள், மன்னர்க்கு
மன்னர்கள்,
வீற்றிருந்தாண்ட அரண்மனை இது. எல்லா வளனும் நலனும் குறைவற்று
நிறைவுற்ற
உறையூரின் பெருமையைப் பெருக்குவது இந்த அரண்மனை
தான். சோழ மன்னர்கள் பிற்காலத்தே
பல காரணங்களுக்காகத்
தலைநகரை மாற்றிக் கொண்டபோது, இத்தன்னிகரற்ற அரண்மனையையும்
துறந்து சென்றனர். பகைவர் உட்புகாத புகார். மிஞ்சுவளம் கொஞ்சும்
தஞ்சை, எங்கும் புகழ்
பரப்பிய கங்கை கொண்ட சோழபுரம் ஆகியன
பின்னே வளவர்க்குத் தலைநகரங்களாயின. இன்று,
முத்தமிழ் முழங்கும்
முக்கனி குலுங்கும், முடிகொண்ட சோழபுரம் என வழங்கும் பழையாறை
தலைநகராகத் திகழ்கிறது. என்றாலும், உறையூர் கரிகாலன் காலத்தில்
உற்றிருந்த சிறப்பில்
ஓரளவும் குறையாது முன்போலப் புகழோங்கி
நிற்கிறது; வளம் தேங்கி நிற்கிறது.
இராசேந்திரன் :
முடிகொண்ட சோழபுரத்து அரண்மனையைக் காட்டிலும்
இந்த உறையூர் அரண்மனை |