பொலிவும் வலிவும் பொருந்தியதாக இருக்கிறதே, வாயிலைக் கடந்து
உள்ளே சென்று, அரண்மனைக்
கட்டடங்களைக் காணலாமா?
இராசராசர் :
காணலாம். இந்த அரண்மனைப் பகுதியில் நீ நிச்சயம் காண
வேண்டிய ஒரு கட்டடம்
இருக்கிறது. அதைக் காட்டவே உன்னை இங்கு
அழைத்து வந்தேன்.
[அதே நேரத்தில் பொன்மணிகள் ஒலிக்க ஓர் அழகிய தேர் வாயிலைக்
கடந்து உள்ளே செல்கிறது.
அதில் தாமரைக்கண்ணன் வீற்றிருக்கிறான்,
வாயில்காவலர்கள் தேரிலிருக்கும் தாமரைக்கண்ணனுக்கு
வணக்கம்
தெரிவிக்கின்றனர்.]
இராசேந்திரன் :
தந்தையே, அந்தத் தேரைக் கவனித்தீர்களா? கலகலவென
ஒலிக்கும் மணிகளெல்லாம்
பொன்மணிகள். தேரில் முத்தும் பவளமும்,
மரகதமும், மாணிக்கமும் பதித்திருக்கிறார்கள்.
தேரிலே ஏறாத்தாழ என்
வயதுள்ள ஓர் இளைஞன் செல்கிறானே! காவலர்கள் அந்த இளைஞனுக்கு
வணக்கம் தெரிவித்ததைக் கவனித்தீர்களா? அவன் ஓர் இளவரசன்
போலத் தோன்றுகிறானே!
அவன் யார்?
இராசராசர் :
ஆவல் என்பது ஐயத்தின் பிறப்பிடம். தேரிலே சென்றவன்
யார் என அறியும்
ஆவலில் கேள்விகளை அடுக்கிவிட்டாய். மகனே,
அவன் இளவரசன் அல்லன். சோழர் குடியிலே
வந்தவருள் பலர் தஞ்சை
அரண்மனையிலும், இவ்வுறையூர் அரண்மனையிலும் தங்கியிருக்கின்றனர்.
அவர்கள் யாருக்கும் இளவரசுப் பட்டம் இல்லை. அவர்கள்
அரசுப்பணியைக் கண்காணிக்கும் அதிகாரிகாளாக
இருக்கிறார்கள்.
தேரிலே சென்றவனின் செல்வச் |