சிறப்பைப் பார்த்து, சேவகர்கள் அவனை வணங்கிய பணிவைப் பார்த்து,
இளவரசனோ என ஐயந்தோன்றுகிறது.
யோசித்துப் பார்! தமிழகத்தில்
அசரர்களுக்குச் சமமான செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்,
வேறு
யாருமில்லை?
இராசேந்திரன் :
வணிகர் பொருள் வளத்தில் வேந்தர்க்கு நிகரானவர்கள்.
அரசர்க்கு அடுத்த
நிலையில் சிறப்பும் மதிப்பும் பெற்றவர்கள்.
இராசராசர் ;
இன்னும் யோசித்துப்பார். தேரிலே சென்றவனை நேரிலே
பார்த்தாயே. அவன்
முகத்தை மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு சொல்.
இராசேந்திரன் :
கண்டுபிடித்து விட்டேன், தந்தையே வணிகர்களைக்
காட்டிலும் செல்வத்திலும்
மதிப்பிலும் சிறந்தவர்கள் செந்தமிழ்ப்
புலவர்கள். அரசர்கள் வாரி வழங்கும் பெருங்
கொடையால் அப்
புலவர்களும் புரவலர்களைப் போலப் புரவியும் களிறும் ஊர்வர்; தேரும்
பல்லக்கும்
ஏறுவர். அவர்களுக்கு அரண்மனைச் சேவகர்கள் என்ன,
அரசர்களே வணக்கம் செலுத்துவார்கள்.
இராசராசர் :
புலவர்கள் வாழ்வில் வறுமையும் வளமையும் சாதாரண
நிகழ்ச்சிகள். ஆனால், வேந்தர்கள்
தரும் வியத்தகு பரிசுகள்சில புலவர்
குடும்பங்களைப் பல தலைமுறைகளுக்குச் செல்வச் செழிப்பிலே
நிலைக்கச்
செய்துவிடுகின்றன.
இராசேந்திரன் :
தேரிலே சென்றவன் புலவர் புதல்வனா?
இராசராசர் :
பெரும்புலவர் ஒருவரின் அரும் புதல்வன். மாபெரும்
புலவரின் மரபிலே வந்தவன்; |