பக்கம் எண் :

காட்சி - 857

   இவனும் ஓர் இணையற்ற புலவனே! இந்த அரண்மனைக்குள் செல்ல
   உனக்கும் எனக்கும் உள்ள உரிமை இந்த இளம் புலவனுக்கும் உண்டு.

இராசேத்திரன் ; விளங்கச் சொல்லுங்கள்.

இராசராசர் : இந்த அரண்மனை சோழ அரசர்க்குச் சொந்தமானது.
  ஆனால் இதற்குள் உள்ள ஓர் ஒப்புயர்வற்ற கட்டடம் இப்போது
  வளவனுக்கு உரியதன்று; இந்தப் புலவனுக்கு உரியது. நீ காண வேண்டிய
  கட்டடம் ஒன்று இங்கே உண்டு என்று சொன்னேனே, அது இப்போது
  சென்ற புலவனுக்குரியது. புலவர்க்குரிய புகழ் வாய்ந்த கட்டடத்தைக்
  காண்போம். வா, உள்ளே செல்வோம்.

        [இருவரும் வாயிலைக் கடந்து உள்ளே செல்கின்றனர்.]
 
                         
-திரை-

                       காட்சி - 9

இடம் ; பதினாறுகால் மண்டபம்.

நேரம் : விடியற்காலை.

தோன்றுவோர் : இராசராசர், இராசேந்திரன், தாமரைக் கண்ணன்.

    [சிற்பச் சிறப்புமிக்க பதினாறுகால் மண்டபத்தின் நடுவே அமைந்த
    மேடையில் அமர்ந்து பாடுகிறான், தாமரைக்கண்ணன். உழவர்
    வேடத்தில் அரசரும் இளவரசனும், மண்டபத்தின் படியிலே நின்று
    கவனிக்கின்றனர்.]