தாமரைக்கண்ணன்
:
(பாடுகிறான்)
மலை யகழ்க்குவனே, கடல்தூர்க்குவனே!
வான் வீழ்க்குவனே, வளிமாற்றுவன்.....
இராசேந்திரன் : (மெல்லிய குரலில்) தந்தையே, என்னுடல் புல்லரிக்கிறது.
இமயத்தே
புலிபொறித்த கரிகால், வளவனின் சிறப்பையல்லவா பாடுகிறான்!
திருமாவளவனின் சிறப்பையல்லவா
பாடுகிறான்! திருமாவளவளின்
அருமையும் பெருமையும் கேட்கக் கேட்க இனிக்கிறது. நம்
முன்னோன்
புகழல்லவா இது!
இராசராசர் :
மகனே, வேடத்தை மறந்து வெளிப்படையாகப் பேசாதே.
புலவன் பாடுவதன் நோக்கம்
அவன் முன்னோன் புகழை
வெளிப்படுத்துவதுதான்!
இராசேந்திரன் :
அவன் முன்னோன் புகழா?
இராசராசர் :
ஆமாம். சற்று நேரத்தில் அவன் பாட்டு முடிந்துவிடும். பிறகு
அவனை அணுகிப்
பேசுவோம்.
தா. கண்ணன் :
(பாடுகிறான்)
அரிமா வன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானம்; அவன்
கோலினும் தண்ணிய தடமென்றோளே!
[பாடி முடிந்ததும் இருகைகூப்பி வணங்கிய பின் தாமரைக்
கண்ணன்
எழுகிறான். உடனே அரசர்
இளவரசனுடன் அவனை அணுகுகிறார்.]
இராசராசர்
இராசேந்திரன் வணக்கம். |