பக்கம் எண் :

காட்சி - 959

தா. கண்ணன் : வணக்கம். நீங்கள்......

இராசராசர் : நீங்கள் சற்றுமுன் பாடினீர்களே, அந்தப் பாட்டிலே
  புகழப்பட்ட வான் பொய்ப்பினும் தான் பொய்யாத வளமார் காவிரி பாயும்
  சோழ வளநாட்டு உழவர்கள். ஊர், முடிகொண்ட சோழபுரம். இவன் என்
  மகன்.

தா. கண்ணன் : உழவர்கள்! முடிகொண்ட சோழபுரம், அப்படியா?

இராசேந்திரன் : ஆமாம்! தாங்கள் யார் என அறியலாமா?

தா. கண்ணன் : நண்பா, என்னையொத்த வயதுடைய நீ என்னைத்
  தாங்கள், நீங்கள் என்று உயர்த்திப் பேச வேண்டாம். என்னை உன்
  நண்பனாகக் கருதிப் பேசு!

இராசேந்திரன் : சரி. நீ யார் என்பதை அறியலாமா?

தா. கண்ணன் : என் பெயர் தாமரைக்கண்ணன். என் தந்தையார் பெயர்
  பாண்டரங்கண்ணன்; என் பாட்டனார் பெயர் பதுமக்கண்ணன்.

இராசேந்திரன் : கண்ணன் பரம்பரையோ?

தா. கண்ணன் : ஆம் நண்பா! நாங்கள் கண்ணன் பரம்பரையினர்.
  தண்டமிழுக்கு மன்னன் எனத் தகும் உருத்திரங்கண்ணன் பரம்பரை
  பைந்தமிழில்.....

இராசேந்திரன் : பட்டினப்பாலை என்னும் நூலையளித்த கடியலூர்
  உருத்திரங்கண்ணன் பரம்பரை; இல்லையா?

தா. கண்ணன் : ஆமாம். இமயம் வென்ற கரிகாலன் இதோ, இந்த
  மண்டபத்தில் கொலுவிருக்க, நான் சற்றுமுன் அமர்ந்த அதே பீடத்தி
  லமர்ந்து எங்கள் முன்னோரான உருத்திரங் கண்ணனார்