பக்கம் எண் :

காட்சி - 961

தா. கண்ணன் : நண்பா. மாலையகழ்க்குவனே என்று சோழனைச்
  சிறப்பித்தார் உருத்திரங்கண்ணனார். குடகுமலை காவிரிப் பெருக்கைத்
  தடுத்தபோது ஒரு சோழன் அந்தக் குடகுமலையைக் குடைந்து, காவிரிப்
  புனல் பூ விரித்துப் பாயச் செய்தான். “கொள்ளுங்குடகக் குவடூடறுத்
  திழியத் தள்ளும் திரைப் பொன்னி தந்தோன்” என்று அவனை
  ஒட்டக்கூத்தர் பாராட்டுகிறார். அவன்தான் காவிரிச் சோழன்.

இராசேந்திரன் : என்ன ஆற்றல்! கடல் தூர்ப்பதும் நடந்த
  நிகழ்ச்சிதானோ?

தா. கண்ணன் : ஆம் நண்பா! கடலில் கல்லும் மண்ணும் கொட்டித்
  தூர்ப்பதற்குப் பதிலாக, அந்த நீரை வேறு கடலுக்கு மாற்றி
  நிலமாக்கினான் ஒரு வளவன். அவனை, ‘மால் கடற்பள்ளி வறிதாக மண்
  காத்து மேல் கடல் கீழ்க்கடற்கு விட்டகோன்’ * என்று அதே
  ஒட்டக்கூத்தர் உளமாரப் புகழ்கிறார். இந்தச் சோழன் சமுத்திரஜித் எனப்
  பாராட்டப்பட்டான்.

இராசராசர் : வான் வீழ்த்தியதும், வளிமாற்றியதும்...?

தா. கண்ணன் : வாய்மைச் செயல்களே! வானத்தே மிதந்த அவுணர்
  கோட்டைகளை அழித்தான் ஒரு சோழன். இவன் தூங்கெயில் எறிந்த
  தொடித்தோட் செம்பியன். இவன் “திறல் விளங்கவுணர் தூங்கெயில்
  எறிந்த, விறல் மிகு முரசின் வெல்போர்ச் சோழன்” எனப் பாராட்டப்
  பட்டான். வளிமாற்றும் வலிமை வளவர் அனைவர்க்கும் இயல்பாக உண்டு
  கடலில்

* சமுத்திரத்தை வென்றவன் என்று பொருள்.