கலம் செலுத்தி, வளியின் வலிமையை அடக்கித் தாம் வேண்டுவழிச்
சென்ற சிறப்பு நோக்கியே,
‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி
லாண்ட உரவோன்’ என்று சோழ மன்னன் சிறப்பிக்கப்பட்டான்.
அதனால் பட்டினப்பாலை பகர்ந்தமை யாவும் உயர்வு நவிற்சிகளல்ல;
உயர்ந்த உண்மைகள்!
இராசேந்திரன் :
தாமரைக்கண்ணா, கரிகாலன் புகழையும் அவருக்கு
முன்னே வாழ்ந்த மன்னர்
பெருமையையும் நன்றாக அறிந்துள்ளாய்.
கரிகாலனுக்குப்பின்னே வந்த சோழ மன்னர்களின் ஆற்றலை
அறிவாயா?
தா. கண்ணன் :
அறிவேன், கரிகாலர்க்குப் பிறகு சோழர் குடியில் மாவீரர்
பலர் தோன்றினர்.
(இராசராசரைப் பார்த்தவாறு) இராசராசரே...
(தாமரைக் கண்ணன் சற்றே இழுத்து நிறுத்த அரசர் தம்மையறியாது
பேசுகிறார்.]
இராசராசர் :
என்ன..........?
(அரசர் திடீரென்று சமாளித்துக் கொண்டு, மேலே பேசாது நிற்கிறார்.)
தா. கண்ணன் :
தாங்கள் ஏதோ சொன்னீர்களே?
இராசராசர் ;
ஒன்றுமில்லை, மேலே சொல்.
தா. கண்ணன் :
சோழ மன்னர்களில் இராசராசரே என்னைக் கவர்ந்தவர்.
அவர்தான் வீரத்திலும்
வெற்றியிலும் கரிகாலுனுக்கு நிகரானவர் என்பது
என் எண்ணம்.
(தாமரைக்கண்ணன் பேசியபோது ‘இராசராசரே’ என்பதை மட்டும்
அழுத்திச் சொல்கிறான்.) |