இராசராசர் :
தாமரைக்கண்ணா! உன்னைப் பார்த்ததும் யாரோ இளவசரன்
என்று நினத்து ஏமாந்து
போனேன். கரிகாலர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் தந்த பரிசுப் பொருளா உங்களை இன்றும்
அரச போகத்தில்
வைத்திருக்கிறது?
தா. கண்ணன் :
கரிகாலனுக்குப் பின்னே வந்த அரசர்களும் எங்கள்
குடும்பத்துக்குப் பெரும்
பொருள் வழங்கியுள்ளனர். விண்ணளாவும் பெரிய
கோயில் அமைத்த மன்னர் மன்னர் இராசராசரும்,
அவருக்குப் பின்னே
அதே பெயரைத் தாங்கித் தன் பெயரால் இராசராசபுரம் என்னும் ஊரும்,
அங்கே இராசராசேச்சுரம் என்னும் கோயிலும் அமைத்த இராசராசரும்*
எங்களுக்கு மணியும்பொன்னும்
மழையாகப் பொழிந்தனர். பிறகு அதே
பெயரைத் தாங்கி அண்மையில் முடிசூட்டிக் கொண்ட நீங்கள்
தான்-ஆம்
இராசராசரே-நீங்கள் தான் இதுவரை எந்தப் பரிசும் தரவில்லை.
இராசராசர் :
(தடுமாறி) நீ என்ன சொல்கிறாய்!
தா. கண்ணன் :
நீங்கள் சோழப் பேரரசர் இராசராசர் என்று சொல்கிறேன்.
உங்கள் அருகே
நிற்கும் இந்த இளைஞர் உங்கள் புதல்வர் இராசேந்திரர்
என்று சொல்கிறேன். வேண்டுமானால்
இந்த அரண்மனையில் இருக்கும்
அதிகாரிகளை அழைத்து உங்கள் உழவர் வேடத்தைக் கலைத்து
உண்மையை
நிரூபிக்கட்டுமா?
இராசராசர் :
வேண்டாம், கண்ணா வேண்டாம், நல்ல வேளையாக இந்த
மண்டபத்துள்
யாருமில்லை. முடிசூடிய பிறகு சோழ நாடு முழுவதும்
பயணம் செய்து
* இவன் இரண்டாம் இராசராசன். |