பக்கம் எண் :

64வளவன் பரிசு

   நாட்டையும் மக்களையும் நன்கறிந்துகொள்ள உழவர் வேடத்தில்
   புறப்பட்டேன் என் மகனும் உடன் வந்தான். நாங்கள் வந்திருப்பது
   இந்தவூர் அதிகாரிகளுக்குத் தெரியாது. தெரியவும் கூடாது.

இராசேந்திரன் : தாமரைக்கண்ணன், எங்களை இன்னார் என்று எப்படி
   அறிந்தாய்?

தா. கண்ணன் : இளவரசரே....

இராசேந்திரன் : என்னை உன் நண்பனாக எண்ணியே பேசு.

தா. கண்ணன் : நண்பா, நான் உங்களை இன்னார் என இனங்
   கண்டுகொள்வது எளிதாகவே இருந்தது. கரிகாலன் புகழைச்
   சொன்னதுபோது உங்கள் இருவர் முகமும் கமலமாய் மலர்ந்தன.

இராசேந்திரன் : சோழர் குடியில் வந்த யாருக்கும் முகம் மலரும். அதைக்
   கண்டு பேரரசர் என்று முடிவு செய்யலாமா? ஏன் நாட்டுப்பற்று மிக்க

     சோழ நாட்டுக் குடிமகனின் முகமும் மலருமே!


தா. கண்ணன் : உண்மைதான். ஆனால் நீங்கள் உழவர்கள் என்று
   சொன்னீர்கள். உங்கள் ஊரின் பெயர் முடிகொண்ட சோழபுரம் என்று
   உரைத்தீர்கள். முடிகொண்ட சோழபுரம் என்பது புதுப்பெயர். பழையாறை
   என்பதே பழம் பெயர். உழவர்கள். எப்போதும் பழம் பெயரைத்தான்
   வழங்குவார்கள். அதனால் நீங்கள் உழவர்களல்லர் என்பதை
   உணர்ந்தேன். உங்கள் உடை உழவர்க்குரியதே. ஆனால் உடலின்
   பொன்னிறமும், விழிகளின் அறிவொளியும் தோற்றத்தில் தெரியும்
   கம்பீரமும் நீங்கள் அரச குடியினர் என்பதை அறிவித்தன. என் எதிரே
   நிற்பவர் சோழப் பேரரசர் இராசராசர் என ஐயுற்