பக்கம் எண் :

காட்சி - 965

  றேன், ஐயத்தை உறுதியாக்கிக் கொள்ள விரும்பினேன். பெரிய 
  கோயிலைக் கட்டியவரின் பெயரைச் சொல்லும் போது, ‘இராசராசரே’
  என்றழைத்து நிறுத்தியதும், அரசர் என்ன என்று கேட்டுத் தம்மை
  வெளிப்படுத்திக் கொண்டார்.

இராசராசர் : தாமரைக்கண்ணா, உன் அறிவின் திறத்தைப் பாராட்டுகிறேன்.
  தலைநகர் திரும்பியதும் தக்க பரிசு அனுப்புகிறேன்.

தா. கண்ணன் : நன்றி, பேரரசரே!

இராசேந்திரன் : தாமரைக்கண்ணா, விடியற்காலையில் இங்கே வந்து
  பட்டினப்பாலையைப் பாடுகிறாயே, இன்று உருத்திரங்கண்ணனாரின்
  நினைவு நாளா?

தா : கண்ணன் : இல்லை. எங்கள் குடும்பத்துக்குப் பெருமையும் புகழும்
  பெற்றுத் தருவன பட்டினப்பாலையும் இந்தக் கண்ணன் மண்டபமும்.
  அதனால் வழி வழியாக எங்கள் குடும்பத்தார் நாளும் விடியற்காலையில்
  இந்த மண்டபத்திற்கு வந்து பட்டினப் பாலையைப் பாடிச் செல்வது
  வழக்கம். என் தந்தையார் இரண்டாண்டுக்கு முன் இறந்துவிட்டார். அது
  முதல் கோயிலுக்குப் போவதுபோலத் தமிழ்க் கோயிலான இக் கண்ணன்
  மண்டபத்துக்கு வந்து பட்டினப்பாலையைப் பாடி மகிழ்கிறேன். கண்ணன்
  மண்டபமும், பட்டினப்பாலையும் எம் குடும்பத்தாருக்கு உயிர் போன்றவை.

இராசேந்திரன் : தந்தையே, கரிகாலன் வழங்கிய இக்கண்ணன்
  மண்டபத்தைக் கலை மண்டபமாக்க வேண்டும். தஞ்சைப் பெரிய
  கோயிலில் இராசராசர் புகழ் கூறும் நாடகம் நடைபெறுவபோல இக்