பக்கம் எண் :

66வளவன் பரிசு

  கண்ணன் மண்டபத்தில் பட்டினப்பாலை நாடகமாக நடிக்கப்

   பெறவேண்டும். இசைப் பாடலாக ஒலிக்க வேண்டும். இது என் அவா.

இராசராசர் : உன் விருப்பப்படியே செய்யலாம். கண்ணன் மண்டபத்தைக்
  கலை மண்டபமாக்கும் பொறுப்பை உனக்கே தருகிறேன். நீயே முன்னின்று
  உன் விருப்பப்படி செய்து முடி.

இராசேந்திரன் : தற்போது நம் நாட்டு மக்களுக்கு நாட்டுப் பற்றுக் 
   குறைந்து வருகிறது. பட்டினப்பாலையை மக்கள் கேட்டால், அதன்   

     பொருளை உணர்ந்தால் அவர்தம் நாட்டுப்பற்று மிகும். ‘சோழ நாட்டு
   மக்கள்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமித மடைவர். தந்தையே,
   சில ஊர்களில் வேதம் சொல்வோர்க்கும், பாரதம் உரைப்போருக்கும் 
   நிலம் வழங்கி அதை ‘வேத விருத்தி’ பாரத விருத்தி’ என
   வழங்குகிறோம். அதைப் போலப்பட்டினப்பாலையை மக்களுக்கு
   விளக்கிச் சொல்ல ஏற்பாடு செய்து, சொல்பவர்களுக்கு நிலம் வழங்கி
   அதனைப் பட்டினப் பாலை விருத்தி’ என வழங்க வேண்டும். அதனால்
   மக்கள் மொழியுணர்வும் நாட்டுணர்வும் பெறுவார்கள்! மலை
   யகழ்க்காவிடினும் சோழ நாட்டின் பகையகழ்க்கும் திறம் பெறுவார்கள்!
   உள்ள உரம் பெறுவார்கள்!

இராசராசர் : உன் ஆர்வத்தைப் போற்றுகிறேன். நீ விரும்பியவாறு
   செய்வோம். இப்போது நாம் புறப்படலாம், மகனே!

இராசேந்திரன் : இந்தக் கண்ணன் மண்டபத்தை விட்டுப் புறப்படுவதும்,
   தாமரைக்கண்ணனைப் பிரிந்து செல்வதும் எளிதாக இல்லை.