காட்சி - 10
இடம் :
தாரைக்கண்ணனின் மாளிகை
நேரம் :
பிற்பகல்
தோன்றுவோர் :
தாமரைக்கண்ணன், அம்பலம்.
[தாமரைக்கண்ணன் மாளிகை அரண்மனை போல அகன்று, உயர்ந்து பல
மாடங்களோடு திகழ்கிறது.
அம்பலம் அதன் முன்னே நிற்கிறான்.
அவன் கையில் ஒரு சிறிய பை. அதில் பொற்காசுகள்
இருப்பது,
‘கலகல’ ஓசையால் தெரிகிறது. தலையை உயர்த்தி மாளிகையைப்
பார்த்து வியப்புறுகிறான்.]
அம்பலம் :
அம்...மா...டி...! எத்தனை மாடி! எவ்வளவு பெரிய மாளிகை!
இதைப் பார்த்தா
கழுத்து வலிக்குது. உம்...வெளியே யாரும் காணோம்.
வாயிற்கதவு திறந்திருக்கிறது... குரல்
கொடுப்போம். புலவரே.....புலவர்
தாமரைக்கண்ணரே..... புலவரே... அடடா..... தொண்டை
வற்றிப்போய்
விட்டதே.....புலவரே....
[தாமரைக்கண்ணன் மாளிகைக்குள்ளிருந்து ஒரு குவளையுடன் வெளி
வருகிறான்.]
அம்பலம் :
வந்து விட்டீர்களா? குவளையுடன் வருகிறீர்களே...
எங்கேயாவது போகிறீர்களா?
தாமரைக்கண்ணன் :
இல்லை, அம்பலம்! உன் குரல் கேட்டது. வெளியே
வர எழுந்தேன். அதற்குள் |