தொண்டைவற்றிவிட்டது என்று சத்தம் போட்டாய். அதனால் இந்தக்
குவளையில் மோர் கொண்டுவந்தேன். இந்தா, குடி.
[அம்பலம் தன் கையிலிருந்த பையைத் திண்ணையில் வைத்துவிட்டுக்
குவளையை ஆவலோடு வாங்கிக்கொள்கிறான்.]
அம்பலம் : அடடா! நீங்கள், புலவரா,
வள்ளலா என்பது புரியவில்லையே,
குறிப்பறிந்து மோர் கொண்டுவந்திருக்கிறீங்க! நீங்கள் கர்ணன்! நீங்கள்
கரிகாலன்!
தா. கண்ணன் : வற்றிய தொண்டையோடு
பாராட்டு வழங்க வேண்டாம்.
மோரைப் பருகியபிறகு எதை வேண்டுமானாலும் பகரலாம்.
அம்பலம் : அப்படியே செய்கிறேன்.
[அம்பலம் குவளையை உயர்த்தி மோரைப் பருகி முடிக்கிறான்.]
அம்பலம் : அருமையான மோர்! குளுமையான
மோர்! வளமையான மோர்!
வறட்சி போக்கும் மோர்!
தா. கண்ணன் : (சிரித்து) அம்பலம், கவிதை
பாடுகிறாயா?
அம்பலம் : பார்த்தீங்களா, பைந்தமிழ்ப் புலவர் வீட்டுப்படியை மிதித்ததும்
பாட்டு வருகிறது.
தா. கண்ணன் : எங்கே இவ்வளவு தூரம்? அன்னம்
அனுப்பினாளா?
அம்பலம் : சின்னம்மாவுக்கு இப்போ என் துணை தேவையில்லைங்க.
உங்களை எங்கே, எப்போது, எப்படிச் சந்திப்பது என்பதெல்லாம் தெரியும்.
அதனால் என்னை அழைப்பதில்லை. |
|
|
|