தா. கண்ணன் :
அப்படியானால் யார் உன்னை அனுப்பியது?
அம்பலம் :
வணிகர் தனபதி அனுப்பினாருங்க.
தா. கண்ணன் :
என்னை மீண்டும் கடைக்கு வரச்சொல்கிறாரா?
அம்பலம் :
இல்லைங்க. அதுக்குப் பதிலாத்தான் என்னை அனுப்பினார்.
அவர்மீது நீங்க ஒரு
பாட்டுப் பாடணும், பாடினால் இந்த முந்நூறு
பொற்காசுகளை உங்களுக்குத் தரச் சொன்னார்.
பிடிங்க பொன்னை!
தொடுங்க. பாட்டை!
[அம்பலம் குவளையை அவனிடம் நீட்டுகிறான்.]
தா. கண்ணன் :
என்ன இது, நான் உன்னிடம் கொடுத்த மோர்க்குவளையை
என்னிடம்
தருகிறாய்!
அம்பலம் :
(குவளையைப் பார்த்து) ஆமாம். இது குவளை. முந்நூறு பொன்
கொண்ட பையைக் கையிலே
கொண்டு வந்தேனே! எங்கே போச்சு?
எங்கய்யாவுக்கு என்ன பதில் சொல்வேன்?
[தாமரைக்கண்ணன் புன்னகையோடு திண்ணையிலிருக்கும் பையைச்
சுட்டிக் காட்டுகிறான்.]
தா. கண்ணன் :
உன் பை இதோ இருக்கிறதே!
அம்பலம் :
(பையை எடுத்துக்கொண்டு) இதே பைதான்! இந்தாங்க முந்நூறு
பொன் என்று தொகையைச்
சொன்னால் அதன் பெருமை உங்களுக்குப்
புரியாது. முந்நூறு பொன்னைக் கண்ணால் கண்டால்தான்
அதன்
மதிப்புத் தெரியும். உடனே நீங்கள் எங்கள்
ஐயாவைப் பற்றி ஒரு பாடல்
பாடி விடுவீர்கள் |