தா. கண்ணன் :
(சினத்தோடு) அம்பலம்!
அம்பலம் :
அப்படி நான் சொல்லலைங்க. எங்க ஐயா சொன்னாருங்க.
அவருதான் இந்த முந்நூறு
பொன்னை உங்களுக்குக் காட்டி, ஒரு பாட்டு
வாங்கி வரச்சொன்னாருங்க! அவ்வளவும் சுத்தமான
பொற்காசுங்க
(குலுக்குகிறான்) ஓசையைக் கேட்டாலே தெரியுமே! இல்லே. கொட்டிக்
காட்டட்டுங்களா?
தா. கண்ணன் :
அம்பலம், கொஞ்சம் இரு. இதோ வருகிறேன்.
[தாமரைக்கண்ணன் மாளிகைக்குள் செல்கிறான். சிறிது நேரம் பொறுத்து
ஒரு பெரிய பையுடன்
வருகிறான்.]
தா. கண்ணன் :
அம்பலம், வணிகர் தனபதி தம்மைப்பாடுவதற்காக எனக்கு
முந்நூறு பொற்காசு
கொடுக்க முன் வருகிறார் தரமற்றவரை என் தமிழால்
பாடமாட்டேன். இதோ இந்தப் பையில்
ஆயிரம் பொன் இருக்கிறது.
இதை அவரிடம் நான் கொடுத்ததாகக் கொடு. இது அவரைப்பற்றிப்
பாடுமாறு என்னிடம் கேட்காமலிருப்பதற்காக நான் தரும் பரிசு என்று
சொல். பிடி இந்தப் பையை.
[அம்பலம் பையைப் பெற்றுக் கொள்கிறான்.]
அம்பலம் :
பாடினால் முந்நூறு பொன் என்கிறார் வணிகர்! பாடுமாறு
கேட்காமலிருக்க ஆயிரம்
பொன் தருகிறீர்கள், நீங்கள். இது
தெரிந்திருந்தா என்னைப் பற்றிப் பாடுங்க என்று உங்களைக்
கேட்டிருப்பேன். நீங்களும் ‘அப்படிக் கேட்காதே’ ன்னு ஆயிரம் பொன்
கொடுத்திருப்பீங்க....புலவரே,
என் மீது ஒரு பாடல் பாடுங்களேன்.... |