பக்கம் எண் :

72வளவன் பரிசு

தா. கண்ணன் : அம்பலம், விளையாட்டுக்கு இது நேரமில்லை.
   புலவர்களைப் பொன் கொடுத்து வாங்கலாம் என்னும் தனபதியாரின்
   இறுமாப்பைக் குறைக்க வேண்டும். சொன்னபடி செய்!

அம்பலம் : சுமை...பெருஞ்சுமை...யார் முகத்தில் இன்று விழிச்சேனோ!
  
 [அம்பலம் ஆயிரம் பொன் மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு,
   முந்நூறு பொன் மூட்டையைக் கையில் பற்றிக்கொண்டு செல்கிறான்.]

                         
-திரை-

                       
காட்சி - 11

இடம் : மதுரையில் பாண்டியனின் ஆலோசனை மண்டபம்.

நேரம் : காலை.


தோன்றுவோர் : சுந்தரபாண்டியன், குருகுலத்தரையன், காங்கேயன், மழவர்
    மாணிக்கம்.
    [சுந்தரபாண்டியன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, அதன் இருபுறமும்
    அமைச்சரும் படைத் தலைவர் இருவரும் வீற்றிருக்கின்றனர்]

சுந்தரபாண்டியன் : அமைச்சரே, சோழ நாட்டிலிருந்து ஒற்றர் தலைவன்
    திரும்பிவிட்டதாகச் சொன்னீர்களே! அவன் தெரிவித்த சேதி என்ன?