பக்கம் எண் :

74வளவன் பரிசு

சு. பாண்டியன் : சோழன் விழித்துக்கொள்ள விடக் கூடாது. இரு
    திங்களுக்குமுன் அவன் தலையில் ஏறிய மகுடம் இன்னும் ஒரு
    திங்களுக்குள் கீழே உருள வேண்டும். அமைச்சரே,
    கோப்பெருஞ்சிங்கனுக்கும் வாணகோவரையருக்கும் பரிசு அனுப்பி
    நட்பைத் தெரிவிக்கச் சொன்னேனே?

குருகுலத்தரையன் : அதை அப்போதே முடித்துவிட்டேன். நட்பு
   வேண்டினோம் நாம். கோப்பெருஞ்சிங்கனோ, பாண்டியரைப்
   படையெடுத்து வருமாறு அழைப்பு விட்டிருக்கிறான். வாண கோவரையர்,
   பாண்டியர் சோழநாட்டை வெல்லப்போவது உறுதி என்பது தமக்குத்
   தெரியும் என்று கூறி, அவ்வாறு வெல்லும் போது தமது பகுதிக்கு
   தம்மையே சுதந்திர அரசனாக்குமாறு வேண்டுகோள் விட்டிருக்கிறார்.

சு. பாண்டியன் : படைத்தலைவரே, நமது படை புறப்படுதற்குச் சித்தமாக
   இருக்கிறதா?

காங்கேயன் : ஆம் அரசே! எந்த நொடியும் புறப்படும் நிலையிலிருக்கிறது.
 

சு. பாண்டியன் : இனித் தாமதிக்கக் கூடாது என் நோக்கம் சோழனை
   வெல்வது மட்டுமன்று, இப்போது தருகிற அடியிலே சோழப்புலி சுருண்டு
   விழ வேண்டும். இன்னும் பல நூற்றாண்டுகளுக்குச் சோழர் குலம் தலை
   தூக்கக்கூடாது. சோழநாடு முழுவதையும் அழித்துச் சுடுகாடாக்க
   வேண்டும். காங்கேயரே, படை இன்னும் இருநாளில் புறப்படட்டும். சோழ
   நாட்டில் வெல்லும் ஊரையெல்லாம் வீழ்த்துங்கள்! சோழ மண்ணில் ஒரு
   கட்டடம் கூட உயர்ந்து நிற்கக் கூடாது. எல்லாவற்றையும்