தகர்த்தெறியுங்கள், தரை மட்டமாக்குங்கள்! எரித்துப் பொசுக்குங்கள்!
காங்கேயன் :
எல்லாக் கட்டடங்களையுமா?
சு. பாண்டியன் :
ஆம்! எல்லாக் கட்டடங்களையும் இடித்துத் தள்ளுங்கள்.
குருகுலத்தரையன் :
அரசே, கோவில்களுக்காவது விலக்களியுங்கள்!
சு. பாண்டியன் :
இறைவன் உறைவிடம் தவிர, ஏனையவற்றை இடித்துத்
தள்ளுங்கள். நான் அந்த
ஊரில் உலா வரும்போது புல்லின்
உயரத்தில்கூட ஒரு கட்டடம், ஒரு சுவர், ஒரு தூண் நிமிர்ந்திருக்கக்
கூடாது.
காங்கேயன் ;
உத்தரவு அரசே!
சு. பாண்டியன் :
அமைச்சரே, நம் அவைக்களப் புலவர் காரணை
விழுப்பரையரை நம்முடன் வரச்சொல்லுங்கள்!
பாண்டியனின் மகத்தான
வெற்றியை, சோழனின் மாபெரும் வீழ்ச்சியை நேரிலே கண்டு பாடட்டும்!
அதைப்பின்னே வரும் பாண்டி நாட்டு மக்கள் பாடிப்பாடிப் பெருமித
முறட்டும்.
குருகுலத்தரையன் :
அப்படியே, அரசே!
சு. பாண்டியன் :
இருநாளில் படை புறப்படவேண்டும். அது புறப்படும்
நேரத்துக்கு இரு நொடிகளுக்கு
முன்னேகூட நம் வீரர்களுக்குத்
தெரியக்கூடாது. பாண்டியன் படையெடுத்து வருகிறான் என்ற செய்தி
சோழனின் செவியை எட்டும்போது, நமது படை |