பக்கம் எண் :

76வளவன் பரிசு

சோழ நாட்டில் பாதிப் பகுதியைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.

காங்கேயன் : படை புறப்படுவதை இரகசியமாகவே வைத்துக்கொள்கிறேன்.
  தாங்களும் படையுடன் வருகிறீர்கள், அல்லவா?

சு. பாண்டியன் : ஆம்! வருகிறேன்! குலோத்துங்கனின் படை மதுரையின்
  மாளிகைகளைத் தகர்த்தபோது மக்கள் பட்ட அவலம், இன்னும் என்
  கண்முன்னே நிற்கிறது. சோழ நாட்டின் அழிவைக் கண்ணால்
  கண்டால்தான் எம் மனத்துயரம் மறையும். படைத்தலைவரே, நீங்கள்
  முதலில் புறப்படுங்கள். மறுநாள் மழவர் மாணிக்கத்தின் தேர்ப்படையுடன்
  நான் புறப்பட்டு வருகிறேன்.

மழவர் மாணிக்கம் : நன்றி அரசே! இந்த மாபெரும் வெற்றியில் நான்
  பங்குகொள்ள முடியாதபடி எங்கே என்னை இந்த மதுரையிலேயே
  நிறுத்திவிடுகிறீர்களோ, என்றஞ்சினேன்! அச்சம் பறந்தது ; ஆனந்தம்
  பிறந்தது! நன்றி, அரசே, நன்றி!

  [சுந்தரபாண்டியன் சிரித்துக்கொண்டே ஆசனத்திலிருந்து எழ, மற்றவரும்
   எழுந்து நிற்கின்றனர். பாண்டியன் மண்டபத்திலிருந்து வெளியேறுகிறான்.]

மழவர் மாணிக்கம் : என்ன அமைச்சரே, உங்கள் முகத்தில் கவலை
  படிகிறது! சோழநாட்டை வெல்வது உறுதி என்பது நம் படையின் கடை
  நிலைவீரனுக்குக் கூட நன்றாகத் தெரியுமே? உங்களுக்கு அதிலே
  ஐயமோ?

குருகுலத்தரையன் : மழவர் மாணிக்கம், நீ இளைஞன். அதனால்
  வெற்றியின் மகிழ்ச்சியை மட்டும் நினைக்