கிறாய்! நான் விழப்போகும் சோழ நாட்டையும் நினைக்கிறேன்!
துயருறுகிறேன்! அரசரின் உள்ளம்
பழிவாங்கத் துடிக்கிறது!
ஆயிரக்கணக்கான கட்டடங்களை அழிக்கும்போது, எரிக்கும்போது,
பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியாகப் போவதை எண்ணி என் இதயம்
கவலையுறுகிறது! கண்ணீர்
பொழிகிறது! என்றாலும் அரசரின் கோபத்தையோ
வேகத்தையோ தடுக்கும் சக்தி எனக்கில்லை.
அவைக்களப் புலவர் நம்முடன்
வரப்போகிறார். அவரிடம் சொல்லித் தகுந்த நேரத்தில் நம்மரசரின்
அடங்காக் கோபத்தைக் கொஞ்சமாவது குறைக்க முயல வேண்டும்.
[மூவரும் வாயிலை நோக்கிச் செல்கின்றனர்]
-திரை-
காட்சி - 12
இடம் :
அன்னம் இல்லம்
காலம் :
நண்பகல்
தோன்றுவோர் :
தனபதி, அன்னம்.
[தனபதி இல்லத்தில் தமது அறையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு
முன்னே பொற்காசுகள்
கொண்ட பை இருக்கிறது. அவர் அந்தப்
பையினையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அன்னம்
உள்ளே
நுழைகிறாள்.]
அன்னம் :
என்னப்பா. இது! ஆகாரம் உட்கொள்ள நீங்கள்
வரவில்லையென்று, சமையலறையில்
அம்மா தவிக்கிறாள். நீங்கள்
ஏதோ ஒரு பையைப் பார்த்துக் |