கொண்டே உட்கார்ந்திருக்கிறீர்களே. இது என்ன பொற்காசுகள் உள்ள
பையா? அல்லது நவமணிகளடங்கிய
பையா?
தனபதி :
ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பை! அவ்வளவும்
மாற்றுக்குறையாத மாசற்ற பொன்
[பையை அவிழ்த்துப் பொற்காசுகளைக் கலகலவென ஓசையெழத் தம்
முன்னே கொட்டுகிறார் தனபதி.]
அன்னம் :
அப்பா, உங்களுக்கு வரவரப் பொருளாசை வரம்பு
மீறிப்போகிறது. பசித்த நேரத்தில்
உணவில் நாட்டம் செலுத்தாமல்
பொன்னைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே!
தனபதி :
அன்னம்! பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று
சொல்லியிருக்கிறார்
பொய்யாமொழிப் புலவர். பொருளுக்கு
மயங்காதவர்கள் பூவுலகத்தில் இல்லை; ஏன் மூவுலகத்திலும்
இல்லை
என்று நினைத்தேன். என் ஆணவத்தை அடக்கிவிட்டான், அந்தப்
புலவன்.
அன்னம் :
எந்தப் புலவனப்பா?
தனபதி :
அவன்தானம்மா. நீ சொன்னாயே, அந்தத் தாமரைக்கண்ணன்.
அன்னம் :
தாமரைக்கண்ணன் உங்கள் ஆணவத்தை அடக்கிவிட்டாரா?
எப்படி ஏன்?
தனபதி :
தாமரைக்கண்ணன் என்னைப் பாடமாட்டான் என்று நீ
சொன்னாய், அவன் என்னைப்
பாடும்படி செய்வதாக நான் கூறினேன்.
அவனை அழைத்து ‘என்னைப் பாடு’ என்று கேட்டபோது, |