எள்ளி நகையாடி விட்டுச் சென்றுவிட்டான். அதனால் முந்நூறு பொன்னை
அம்பலத்திடம் கொடுத்தனுப்பி,
பொன்னைக் கொடுத்து என்னைப் பற்றி
ஒரு பாட்டுப்பாடும்படி கேட்கச் சொன்னேன்.
அன்னம் :
அவர் முந்நூறு பொன்னை அம்பலத்தின் முகத்திலே
வீசியெறிந்து, ‘பாடமுடியாது’ என்று
மறுத்து விட்டாரா?
தனபதி :
அப்படிச் செய்திருந்தால் எனக்கு ஆத்திரம் பிறந்திருக்கும்!
ஆணவம் குறைந்திருக்காது.
நான் கொடுத்தனுப்பிய பொன்னைப்
பெற்றுக்கொள்ளாமல், என்னைப் பாடும்படி கேட்காமலிருப்பதற்காக
இந்த
ஆயிரம் பொன்னைக் கொடுத்தனுப்பினான்!
அன்னம் :
தாமரைக்கண்ணன் கல்விச் செல்வத்தைப் போலவே
பொருட்செல்வமும் பொருந்தியவர்
என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?
தனபதி :
பொருட்செல்வம் பொருந்தியிருப்பதில் என்னம்மா சிறப்பு?
என்னிடத்தில் இல்லாத
பொருளா? குன்றளவு பொருள் கொட்டிக்
கிடந்தாலும், மேலும் மேலும் பொருள் குவிக்கும் ஆசை
யாரையும்
விடாது. பாடினால் முந்நூறு பொன் தருவதாக நான் கூற, பாடும்படி
கேட்காமல் இருக்க
ஆயிரம் பொன் தருகிறேன் என்று தந்து விட்டானே!
அதோ இங்கே கொட்டியிருக்கிற ஆயிரம்
பொற்காசுகளை எளிதில்
இழந்துவிட யாருக்கும் மனம் வரும்? தாமரைக்கண்ணன்
இலட்சியப்புலவன்!
அன்னம் :
இப்போதாவது அதைப் புரிந்துகொண்டீர்களே, அது போதும்,
தாமரைக்கண்ணன் கொடுத்த |