பக்கம் எண் :

80வளவன் பரிசு

    ஆயிரம் பொன்னை ‘வந்தவரை வரவு’ என்று எடுத்து கொண்டீர்கள்
    போலிருக்கிறதே!

தனபதி : இன்று காலை இதைத் திருப்பிக் கொடுத்து விட்டு வருமாறு
  அம்பலத்தை அனுப்பினேன். தாமரைக்கண்ணன் கொடுத்ததைத் திரும்பப்
  பெறும் பழக்கம் கண்ணன் பரம்பரைக்கு இல்லை என்று கூறிப்
  பொன்னைத் திருப்பிவிட்டான். அன்னம், தாமரைக் கண்ணன் என்னைப்
  பாடவேண்டும் என்று முன்னர் விரும்பியது. உன் வாயை அடக்க; ‘அவன்
  பாடமாட்டான்’ என்று நீ சொன்னதைப் பொய்யாக்க. இப்போதோ அந்த
  இலட்சியப் புலவனிடம் பாடல் பெறவேண்டும் என்று என் உள்ளம்
  உண்மையாகவே விரும்புகிறது. அவன் என்னைப் பாடும்படிசெய் அன்னம்!

அன்னம் : அப்பா, இது விபரீத ஆசை! தாமரைக் கண்ணன் உங்களின்
  குணநலன்களை நன்றாக அறிவார். அவர் உங்களைப் பாடமாட்டார். நான்
  சொன்னாலும் பாடமாட்டார்.

தனபதி : அன்னம், நீயும் அவனும் அடிக்கடி சந்தித்து உரையாடி
  மகிழ்கிறீர்களாமே! உண்மையைச் சொல்! அவன் உன்னைக்
  காதலிக்கிறான்! உன்னை மணந்துகொள்ள விரும்புகிறான்! இல்லையா?

அன்னம் : ஆமாம் அப்பா! அவர் விரும்புவது போல நானும் அவரை
  விரும்புகிறேன்.

தனபதி : ஒரு புலவன் மகனுக்கு என் பெண்ணைத் தரச் சாதாரணமாக
  நான் சம்மதிக்கமாட்டேன். இப்போது ஒரு நிபந்தனைக்குட்பட்டு அதற்குச்
  சம்மதிக்கிறேன்.

அன்னம் : நிபந்தனையா?