பக்கம் எண் :

8வளவன் பரிசு

அன்னம் : நான் பாடிய பாட்டு உன் வீட்டுச் சொத்தா? அப்படியே
  இருக்கட்டுமே.....நான் பாடியதில் என்ன தப்பு? மலை யழைக்குவனே...
  கடல் தூக்குவனே!

தா. கண்ணன் : நிறுத்து நிறுத்து! (கத்துகிறான்) மீண்டும் எங்கள்
  சொத்தைச் சிதைக்காதே! பாட்டின் பொருளை வதைக்காதே!

அன்னம் : பாடிய பாட்டில் என்ன பிழை? அதைச் சொல்லாமல் கூச்சல்
  போடுகிறாயே!

தா. கண்ணன் : பெண்ணே......

அன்னம் : என் பெயர் அன்னம்.

தா. கண்ணன் : அன்னம், சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர்
  பாடப்பட்ட பாடல் இது! இமயத்தில் புலிக் கொடியைப் பறக்கவிட்ட
  கரிகாற்பெருவளத்தானின் வீரத்தை விளக்கும் பாடல் இது. கரிகாலன்
  எப்படிப் பட்டவன் தெரியுமா?

    
  மலையகழ்க்குவனே! கடல் தூர்க்குவனே!
      வான்வீழ்க்குவனே! வளி மாற்றுவன்....


  இது பாடல். நீ மலை அழைக்குவன் என்கிறாய் ! கடலைத் தூக்குவன்
  என்கிறாய்! வலி மாற்றுவன் என்கிறாய்! உன் பிழை, பாடல் பாடிய
  புலவரையும் அவரால் பாடப்பட்ட புகழாளனையும் இகழ்வது போல்
  இருக்கிறது.

அன்னம் : மலை யகழ்க்குவன்...கடல் தூர்க்குவன்...அடடே...பாட்டு நன்றாய்
  இருக்கிறதே. எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு புலவர் வீடு. அங்கே ஒரு
  பெண் எப்போதும் இதைப் பாடுவாள். பாடலை என் வீட்டி