பக்கம் எண் :

84வளவன் பரிசு

   விரைவில் தடுத்தேன். அதனால் மாடமதுரையின் பாதிப் பகுதி தப்பியது!
   அந்த மதுரைப் போரைக் கண்ணெதிரே கண்டதுமுதல் என் மனம்
   சித்தார்த்தனின் சீடனான அசோகனைப் போல அமரை வெறுத்தது.
   அதே கோரக் காட்சிகளைக் கண்ட சுந்தர பாண்டியனின் சிந்தையோ,
   பழிக்குப்பழி, குருதிக்குக் குருதி எனக் கொதித்தது. தேவி இதை அறிந்த
   காரணத்தால்தான் சுந்தர பாண்டியனின் படை வந்துவிட்டது
   என்பதையறிந்து வாடுகிறேன். அவன் படையிலே வீரர்களை
   உருவாக்கவில்லை.... வெறியர்களை உருவாக்கியிருக்கிறான்!
 
      [அமைச்சர் பிருமாதிராசன் உள்ளே வருகிறார்.]
 

புவன : வாருங்கள் அமைச்சரே!

இராசராசர் : அமைச்சரே பாண்டியன் படை வருவதை முன்னரே
   அறியமுடியாதது ஏன்? இப்போதைய நிலைமை என்ன?

பிருமாதிராசர் : பேரரசே, சுந்தரபாண்டியன் திட்டமிட்டுச் செய்த
  வேலையிது. படை என்று புறப்படும் என்பது அவனுடைய
  படைவீரர்களுக்கும் தெரிவிக்கவில்லையாம். திடீரென ஒரு நாள்
  உதயநேரத்தில் சோழநாட்டை நோக்கிச் செல்லுங்கள் என்று உத்தர
  விட்டானாம் பாண்டியர் படைத்தலைவன், காங்கேயன். மதுரையிலிருந்த
  நம் ஒற்றர்கள் யார் என்பதை எப்படியோ அறிந்து அவர்களை முன்னரே
  கைது செய்து விட்டானாம். தப்பி வந்த ஒற்றன் சற்று முன்னர்தான் வந்து
  இச் செய்தியைத் தெரிவித்தான்.