பக்கம் எண் :

86வளவன் பரிசு

இராசராசர் : (கோபத்தோடு) அமைச்சரே, எல்லையிலேயே பகைவன் நிற்க.
  கொல்லை வழியே உயிர் தப்பி ஓடும் கோழையாக்குகிறீர்களா, என்னை?

புவன : அரசே! அமைச்சர் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது. வெள்ளத்தை
  வெறுங் கையால் தடுக்க முனைவது வீண் வேலை. பாண்டியன் ஒரு புறம்.
  பாதகன் கோப்பெருஞ்சிங்கன் மறுபுறம் என்றால், இடையிலே நிற்கும்
  சோழப்படை வீணாக அழியும். அதனால்...

இராசராசர் : பாண்டியனுக்குப் பயந்து போசள நாட்டிலே பதுங்கிக்
  கொள்ளச் சொல்கிறாயா? தேவி.

பிருமா : புலி பதுங்குவது பயத்தினால் அல்ல, பாய்வதற்காகத்தான்! போசள
  நாட்டிற்குச் சென்று வல்லாள தேவரின் துணையோடு பெரும்படை
  திரட்டிக் கொண்டு மீண்டும் வந்து போரிடுவோம். அப்போது இதே
  பாண்டியன் புறமுதுகு காட்டி ஓடுவான். அரசே, அதற்கான ஏற்பாடுகளைச்
  செய்துவிட்டே இங்கே வந்திருக்கிறேன். உடனே புறப்படுங்கள்....

இராசராசர் : என் மகன் இராசேந்திரன்...

பிருமா : அவர் தலைநகரின் படையுடனிருக்கிறார். அந்தப் படையையும்
  அவரையும் போசள நாட்டிற்கு அனுப்புகிறேன்...

          [இராசேந்திரன் வேகமாக உள்ளே நுழைகிறான்.]

இராசேந்திரன் : தந்தையே...அமைச்சரே.....நான் கேள்விப்பட்டது
   உண்மைதானா?

பிருமா : எதைக் குறிப்பிடுகிறீர்கள், இளவரசரே?