இராசேந்திரன் :
பாண்டியன் வென்ற ஊரிலுள்ள மாடமாளிகைகளை,
கூடகோபுரங்களை இடித்துத் தள்ளி
எரித்துப் பொசுக்கி வருகிறானாமே!
குச்சு வீடுகளையும் விட்டுவைக்காமல் கொளுத்தி மகிழ்கிறானாமே.
இன்று
வந்த ஒற்றன் சொன்னான். உங்களிடமும் தெரிவித்தானாம்.
பிருமா :
உண்மைதான் இளவரசே! கோயில்களைத் தவிர வேறெதுவும்
நிமிர்ந்து நிற்கக் கூடாது
என்று ஆணையிட்டுள்ளானாம் பாண்டியன்.
இராசேந்திரன் :
அமைச்சரே, பாண்டியனது படையின் ஒரு பகுதி
உறையூரையும் மறுபகுதி தஞ்சையையும்
சூழ்ந்துகொண்டதாக ஒற்றன்
சொன்னான். இராசராசர் எழுப்பிய பெரிய கோயில் தப்பிவிடும்.
ஆனால்
உறையூரிலுள்ள தமிழ்க் கோயில் தப்புமா?
பிருமா :
தமிழ்க் கோயிலா?
இராசேந்திரன் :
ஆம்! தமிழ்க் கோயில்தான்! கரிகால் வளவன் தன்மீது
பாடப்பட்ட
புகழ் மாலையான பட்டினப்பாலைக்குப் பரிசாகக்
கொடுத்தானே, பதினாறுகால் மண்டபம்....அந்தப்
பரிசில் மண்டபந்தான்
பைந்தமிழ்க் கோயில்; பழிதீர்க்கத் துடிக்கும் வெறியில் பாண்டியன்
அந்தத்
தமிழ்க் கோயிலைத் தகர்த்துவிட்டால், அது சோழர் குடிக்குத் தீராத
களங்கமாகும்.
தந்தையே, கண்ணன் மண்டபத்தைக்
கலைமண்டபமாக்குவதாக வாக்களித்தோம்! அது கற்குவியலாகாமலாவது
தடுக்க வேண்டாமா?
புவன :
வளவன் ஒரு புலவனுக்கு வழங்கிய பரிசில் மண்டபம், நமது
அரசவை மண்டபத்தைக் காட்டிலும்
உயர்ந்தது; உன்னதமானது. அதைக்
காத்துத் |