தான் தீர வேண்டும். ஆனால், கோப்பெருஞ்சிங்கன்
திருமுனைப்பாடியிலிருந்து பெரும்படையுடன்
பாண்டியனுக்கு உதவ வரப்
போகிறானாமே....
பிருமா :
தொண்டை மண்டலத்துச் சிற்றரசன் சம்புவராயனும்
பாண்டியனுக்குத் துணைசெய்து நல்ல
பெயர் தேடிக்கொள்ள
முனையக்கூடும். அதனால் அரசரையும் அரசியையும் போசள
நாட்டுக்கனுப்ப
ஏற்பாடு செய்துள்ளேன். இளவரசே! உங்களையும்
அவர்களுடன் அனுப்புவது என் திட்டம். இந்நிலையில்
பாண்டியப்படை
சூழ்ந்துகொண்ட உறையூருக்குப் போவது, உசிதமன்று.
இராசேந்திரன் :
ஆயிரமாண்டாக நிமிர்ந்து நிற்கும் தமிழ் மண்டபம் நம்
காலத்தே வீழ்வது
நாணம் தருவது தந்தையே. நீங்களும் அன்னையாரும்
போசளம் செல்லுங்கள். நான் உறையூர் செல்கிறேன்.
பட்டினப்பாலைப்
பரிசில் மண்டபத்தைக் காக்க முனைகிறேன். சென்று வருகிறேன்.
புவன :
மகனே, இராசேந்திரா!
[அரசி அழைத்துக் கொண்டிருக்கும் போதே இராசேந்திரன்
வெளியேறுகிறான்.]
இராசராசர் :
தேவி, புயல் போலப் புறப்பட்ட புதல்வனோடு நானும்
புறப்படத்தான்
விரும்புகிறேன். உறையூரின் பதினாறுகால் மண்டபம்
சோழர் குலத்தின் புகழ் விளக்கு! இமயத்தை
வென்ற வாகைச் செயல்
போலச் சிறந்தது. பதினாறுகால் மண்டத்தைப் புலவனுக்கு வளவன்
வழங்கிய
ஈகைச் செயல் ! அதைக் காப்பது சோழரின் கடமை. அரசி,
அந்தப் |