பக்கம் எண் :

காட்சி - 1389

  புனிதக் கடமைக்காகப் புறப்பட்ட புதல்வனோடு நானும் செல்லவே
  விரும்பினேன்! ஆனால் பாண்டியனிடம் சிக்கும் சோழநாட்டை,
  இன்றில்லாவிட்டாலும், நாளை மீட்கும் கடமை எனக்கிருக்கிறது.
  அதற்காகத்தான் நான் இராசேந்திரனுடன் செல்லவில்லை.

பிருமா : அரசே, இளவரசர் அறிவும் ஆற்றலும் பெற்றவர். அவர்க்கு ஆபத்து
  நேராது என்றே என் நெஞ்சம் நினைக்கிறது. இனித் தாமதிக்க வேண்டாம்.
  புறப்படுங்கள், அரசே! மிக விரைவில் போசளத்தில் சந்திக்கிறேன்!

இராசராசர் : சேர பாண்டிய நாடுகளை வென்று, திரிபுவன வீர தேவன்
  என்னும் சிறப்புப் பெயர் பெற்ற குலோத்துங்க சக்கரவர்த்தியின் புதல்வன்,
  உயிர் காக்க ஓடுவது விதியின் விளையாட்டுப் போலும்!

பிருமா : நீங்கள் ஓடுவது உங்கள் உயிரைக் காக்கவன்று: சூரியனில்
  தொடங்கிய சோழர் குலத்துக்குரிய இந்தப் புனல் நாட்டை மீட்க! அதனால்
  உள்ளமுடையாமல் புறப்படுங்கள்.

இராசராசர் : தேவி, புறப்படு!


  [அரசர் அரசி இருவரும் புறப்படுகின்றனர், அமைச்சர் அவர்களை
  அழைத்துக்கொண்டு செல்கிறார்.]


                           
-திரை-