பக்கம் எண் :

90வளவன் பரிசு

                       காட்சி - 14

இடம் : உறையூர் அரண்மனையில் பதினாறுகால், மண்டபம்.

நேரம் : இரவு

தோன்றுவோர் : இராசேந்திரன், தாமரைக்கண்ணன் அன்னம், அம்பலம்.

    [இராசேந்திரன் முன்போல உழவன் வேடத்தில், பதினாறுகால்
    மண்டபத்தின் முன்னே நிற்கிறான். நிலவின் ஒளி, மண்டபத்தில் ஓரளவு
    பரவுகிறது. நிலவொளியில் அரண்மனையின் கட்டடங்கள் இடிந்து
    கிடப்பதைப் பார்க்கிறான்.]

இராசேந்திரன் : முன்னர் வந்தபோது விண்ணளாவ நின்ற மாளிகைகள்
  இடிந்து, சரிந்து கிடக்கின்றன. புயல் நுழைந்த பூங்காபோல, பூகம்பம்
  தாக்கிய பேரூர்போல இந்த உறையூரே சீரிழந்து, சிதைந்து நிற்கிறது!
  தஞ்சை நகரும் இப்படித்தான் தரைமட்டமாக இருக்குமோ? இறைவா,
  இதென்ன சோதனை! சோழநாட்டை, சோழ வளநாடு என்பார்களே! அந்த
  வளநாட்டுக்கு இப்படி ஓர் அழிவா? இந்த அழிவைக்கண்டு நொந்த
  சிந்தை, பரிசில் மண்டபம் இன்னும். வணங்காமுடியனாக நிமிந்து
  நிற்பதைக் கண்டு சற்றே சாந்தி அடைகிறது.

       [யாரோ விம்மும் குரல் மெல்லக் கேட்கிறது]