இராசேந்திரன் :
ஏதோ குரல் கேட்கிறதே விம்மிப் புலம்பும் சோகக் குரல்.
இந்தப் பரிசில்
மண்டபத்திலிருந்துதான் கேட்கிறது. யாரங்கே?
தாமரைக்கண்ணன் :
இளவரசே என்னைத் தெரியவில்லையா? முதல்
சந்திப்பிலேயே என்னை உம்
நண்பனாக ஏற்றுக்கொண்டதை
மறந்துவிட்டீர்களா?
இராசேந்திரன் :
தாமரைக்கண்ணன் குரல்! தாமரைக்கண்ணா!
தா. கண்ணன் :
இளவரசே...
[பரிசில் மண்டபத்தின் நடுவேயிருந்த தாமரைக்கண்ணன் எழுந்து
மண்டபத்தின்
வாயிற்படியருகே வருகிறான் அங்கே நிலவொளிபால்
போலப் பாய்ந்திருப்பதால் அவனைக்கண்டு
மகிழ்கிறான் இளவரசன்!]
இராசேந்திரன் :
தாமரைக்கண்ணா, உறையூரில் நுழைந்த நொடியிலிருந்து
உன்னைத்தான் தேடினேன்.
உன் வீடு இருக்கும் இடத்தை அறிந்து
அங்கும் சென்றேன்.
தா. கண்ணன் :
என் வீட்டைக் கண்டீர்களா இளவரசே. அரசனின்
மாளிகைக்கு நிகராக எழுந்து
நின்ற எனது எழுநிலை மாடத்தைப்
பார்த்தீர்களா?
இராசேந்திரன் :
எழுநிலை மாடம் இடிபாடுகளாக இருந்த காட்சியைக்
கண்டு கலங்கினேன். தாமரைக்
கண்ணா, உன் வீட்டைத் தேடிச்
செல்லும்போதே அது எரிந்தோ, இடிந்தோ சிதைந்திருக்கும்
என்பது
எனக்குத் தெரியும்; பாண்டியனின் பழிவாங்கும் வெறிச் செயலின்
விளைவை - விபரீதத்தைப்
பாதை |