பக்கம் எண் :

92வளவன் பரிசு

  முழுதும் பார்த்துக்கொண்டுதானே வந்தேன். என்றாலும், உன் வீட்டருகே
  உன்னைக் காணலாமோ என்ற ஆசையால் சென்றேன். அவலத்தைக்
  கண்டேன். உன் வீட்டார்க்கு இன்னல் ஏதுமில்லையே?

தா. கண்ணன் : பாண்டியனின் அழிவுப்படை எங்கள் வீதியை நெருங்கும்
  முன்னே என் வீட்டாரை வெளியேற்றி விட்டேன்.

இராசேந்திரன் : அவர்களுடன் நீ செல்லவில்லையா?

தா. கண்ணன் : சென்றிருப்பேன். அதற்குள் சுந்தர பாண்டியனின் அறமற்ற
  ஆணையை அறிந்தேன். சோழ நாட்டின் சுந்தரத் திருநகரில் எந்தக்
  கட்டடமும் நிமிர்ந்து நிறகக் கூடாதாம். இது அரசர்க்குரியதானாலும்,
  அறவோர்க்குரியதானாலும், புலவர்க்குரிய தானாலும்,
  புகழோர்க்குரியதானாலும் இடித்துத்தள்ள உத்தரவிட்டுள்ளான். உன்மத்தன்
  பாண்டியன் என்பதை அறிந்தேன். அதனால் இந்த அரண்மனைப்
  பகுதிக்கு ஓடி வந்தேன். அரண்மனைக் கட்டடங்களை இடித்துத் தள்ளும்
  இழிபணியை மேற்கொண்ட வீரர் தலைவனைச் சந்தித்து, பட்டினப்பாலைப்
  பரிசில் மண்டபத்தின் சீரெல்லாம் செப்பினேன்! அது செவிடன் காதில்
  ஊதிய சங்கானது! கரிகாலன் கொடுத்த சிறப்பையோ கண்ணனார்
  கொண்ட சிறப்பையோ தெரிந்து கொள்ளவும் அந்த மூடன்
  விரும்பவில்லை. ‘ஆண்டவன் கோயில் தவிர பிற அனைத்தையும்
  அழிக்கும்படி ஆணை. அதை நிறைவேற்றியே தீருவேன்’ என்று
  கூறிவிட்டான். அதைக் கேட்டதிலிருந்து இங்கே அமர்ந்து
  கண்ணீர்வடிக்கிறேன். கதறித் துடிக்கிறேன். இளவரசே, நீங்கள்
  தலைநகரிலிருந்து இங்கே எப்படி