வந்தீர்கள்? உழவன் வேடத்தில் வந்திருப்பதைப் பார்த்தால், தனியாக
வந்திருப்பதாகத்
தெரிகிறது.
இராசேந்திரன் :
பாண்டியன் தன் படை வீரர்க்கிட்ட ஆணையை அறிந்தே
ஓடி வந்தேன். பாண்டிய
வீரர்கள், மண்ணுக்கும் மாணிக்கத்துக்கும் உள்ள
வேற்றுமை யறியாத மூடர்கள். இந்தக் கன்னித்
தமிழ்க் கோயிலை,
கண்ணனாரின் புகழ்க் கோயிலை, கரிகாலனின் கொடைக் கோயிலை,
வெறும்
கட்டடமாகக் கருதி அழித்துவிடுவார்களோ என்று அஞ்சி ஓடி
வந்தேன். பாண்டியனின் பெரும்படையைத்
தடுக்க முடியாது என்பதை
அறிந்து. அரசர், போசள நாட்டுக்குப் போகிறார். அவரோடு செல்லாமல்
நான் உறந்தைக்கு ஓடி வந்ததற்குக் காரணமே, இந்தப் பரிசில்
மண்டபத்தைப் பாதுகாப்பதற்குத்தான்!
தா. கண்ணன் :
முடியாது இளவரசே அது முடியாது! அரசர் உறந்தைக்கு
ஒரு காவதம் தள்ளிப் பாடி
வீட்டில் இருக்கிறார். படைத்தலைவர்கள்
காங்கேயனும், மழவர் மாணிக்கமும் அரசருடன்
இருக்கிறார்கள். இங்கே
சிறு படைத்தலைவர்கள் சிதைவுத் தொழிலில் முழு மூச்சோடு
ஈடுபட்டிருக்கிறார்கள்!
நாளை கதிரவன் உதித்ததும் இந்தக் கண்ணன்
மண்டபத்தை இடிக்கப் போவதாக அந்தப் படைத்
தலைவன் சொன்னான்.
இளவரசே, இடிந்து நொறுங்கும் மாளிகையோடு என் வாழ்வும் முடிந்து
போகட்டும்
என்றே இங்கே வந்தேன். இனி இந்த இடத்தைவிட்டு
வரமாட்டேன். கண்ணன் மண்டபத்துக் கற்குவியல்
என் சமாதியாக
அமையட்டும்.
இராசேந்திரன் :
புலவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்பது உண்மைதான்!
உணர்ச்சி
மிகும்போது அறிவு |