பக்கம் எண் :

94வளவன் பரிசு

  உறங்கிப் போகிறது என்பது உண்மைதான்! தாமரைக் கண்ணா, பழம்
  சிறப்புமிக்க இந்தப் பதினாறு கால் மண்டம் அழியும்போது நீயும்
  அழிவதால் என்ன பலன்! அதற்குப் பதில் இந்த உயிரைக் கொடுத்தேனும்
  மண்டபத்தைக் காப்போம் என்ற உறுதி எடுத்துக்கொள்!

தா. கண்ணன் : இந்த மண்டபத்தைக் காக்க என் உயிரையும் தரச் சித்தம்!
  ஆனால், என்ன செய்வது? எப்படிச் செய்வது?

இராசேந்திரன் : நாம் சுந்தர பாண்டியனைச் சந்திப்போம். சங்கம் வைத்துத்
  தமிழ் வளர்ந்த மண்ணிலே பிறந்தவனின் மனத்திலே தமிழ்ப் பற்றுச்
  சிறிதாவது இருக்காதா? அந்தச் சிறு பொறியை ஊதிப் பெரு
  நெருப்பாக்குவோம்! தமிழின் சிறப்புக்குச் சான்றாக நிற்கும் இந்தக்
  கண்ணன் மண்டபத்தைக் காப்பாற்றக் கோருவோம்.

தா. கண்ணன் : அப்படியே கேட்போம். அப்போதும் மறுத்தால் அவன்
  மீது பாய்ந்து அவனை அங்கேயே கொன்று விடுகிறேன்.

இராசேந்திரன் : கோபத்தால் லாபமில்லை! ஆத்திரப்படுவது ஆதாயம்
  தராது! தாமரைக்கண்ணா, பெரும் புலவரின் வழியிலே வந்த நீ சித்தித்துப்
  பார்! அவன் சிந்தையைத் தொடும் சொல்லைத் தேர்ந்தெடுத்துச் சொல்!
  நானும் உன்னருகே துணையாக நிற்கிறேன்! இருவரும் முயன்று
  பாண்டியன் இதயத்தில் தமிழ்க் கனல் மூட்டுவோம்! கனல் பழிவெறி
  யோட்டுவோம்!

தா. கண்ணன் : இளவரசே, உணர்ச்சிக்கு இடமளித்து, அழுவதில் காலத்தை
  வீணாக்கி, அழிவதை முடிவாக