பக்கம் எண் :

காட்சி - 1495

  ஏற்க நினைத்தேன். நீங்களோ அரசர் புதல்வர்! கணத்தில் பெருகும்
  உணர்வைக் கச்சிதமாக அடக்கி, அறிவின் திறத்தால், அரசியல்
  தந்திரத்தால் ஒன்றை ஆக்கவும், அழிக்கவும் அறிந்த கோமகன் நீங்கள்.
  உங்கள் சொற்படி நடக்கிறேன். பாண்டிய மன்னன் ஒரு காவத தூரத்தில்
  இருக்கிறான். அவ்வளவு தூரம் செல்வது எப்படி? நாளை இந்த
  மண்டபத்தை இடிக்கப் போவதாக இங்கிருக்கும் படைத்தலைவன்
  சொன்னானே! நாம் அரசரைக் கண்டு வரும் வரை அவன் செயலைத்
  தடுப்பதெப்படி?

இராசேந்திரன் : நான் என் குதிரையில்தான் வந்தேன். அதை
  ஊர்ப்புறத்தே மறைவான இடத்தில் கட்டி வைத்திருக்கிறேன். என் குதிரை
  நம் இருவரையும் ஏற்றிச் செல்லும் ஆற்றல் பெற்றது! விடிவதற்கு முன்னே
  ஒரு காவதத்தைக் கடப்பதும் அதுதான்! நாம் திரும்பி வரும்வரை இந்தக்
  கண்ணன் மண்டபத்தைக் காவலர் இடிக்காமல் காப்பது எப்படி
  என்பதுதான் புரியவில்லை.

தா. கண்ணன் : இளவரசே, அதோ பாருங்கள்! தீப்பந்தம் ஏந்திக் கொண்டு
  யாரோ இருவர் வருவது தெரிகிறது.

   [தூரத்தில் தெரிந்த தீப்பந்தமும் இரு உருவமும் மண்டபத்தை நோக்கி
   வருகின்றன]

இராசேந்திரன் : பாண்டிய வீரர்களா யிருப்பார்களோ? தாமரைக்கண்ணா,
  வீரர்கள் மக்களுக்குத் தொல்லை தருகிறார்களா?

தா. கண்ணன் : வீரர்களின் செயலைத் தடுக்காதவரை யாருக்கும்
  தொல்லையில்லை. பொன்னையும் பொருளையும் கவர்வதையோ, பிறந்து
  வளர்ந்த வீடு