இராசேந்திரன் :
பெண்ணே, இன்று இடிக்கவில்லை. ஆனால் நாளை
இடிப்பார்கள். இதை எப்படியும்
காப்பாற்றுவதற்காக நானும்
தாமரைக்கண்ணனும் சுந்தரபாண்டினைச் சந்திக்கப்
போகிறோம்.
பாண்டியனின் மனத்தை மாற்றி இந்த ஒரு மண்டபத்துக்கு உயிர்ப்பிச்சை
வழங்குமாறு
வேண்டப்போகிறோம். முயற்சியில் வெல்வோம் என்ற
நம்பிக்கையிருக்கிறது. அரசரைக் கண்டு
மீண்டு வருவதற்குள் முரட்டு
வீரர்கள் இந்த மண்டபத்தை இடிக்காமல் தடுக்கவேண்டும். அப்படித்
தடுப்பது எப்படி என்பது புரியாமல் தவிக்கிறோம்.
தா. கண்ணன் :
ஆமாம்! மன்னன் பாண்டியன் எங்கள் வேண்டுகோளை
ஏற்று, இந்த மண்டபத்துக்கு
விலக்களிக்கக் கூடும். அந்த உத்தரவைப்
பெற்றுத் திரும்புவதற்குள் இந்தப் பரிசில் மண்டபத்தைப்
பாழ்படுத்தி
விட்டால், எங்கள் முயற்சி பயனற்றப் போகுமே என்று கலங்குகிறோம்.
அன்னம் :
நீங்கள் பாண்டியரைக் கண்டு மீண்டு வர எவ்வளவு நேரமாகும்?
தா. கண்ணன் :
இளவரசரின் குதிரையில் இப்போதே புறப்படப்
போகிறோம்.
இராசேந்திரன் :
நாளை நண்பகலுக்குள் திரும்பி விடுவோம்.
அன்னம் :
அதுவரை பாண்டிய வீரர்கள் இந்த மண்டபத்தை இடிக்காமல்,
காக்க வேண்டும். அவ்வளவு
தானே...?
இராசேந்திரன் :
ஆமாம்! |